மும்பை: ஆசிய பணக்காரர்கள்
மும்பை: ஆசிய பணக்காரர்கள்


மும்பை: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் சீனாவின் ஜேக் மாவை முந்தி, இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார்.
ரிலையன்ஸ் ஜியோவின் 10 சதவீத பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை அடுத்து நேற்று அமெரிக்க பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபத்தை ஈட்டியது. இதனால் அம்பானியின் சொத்து மதிப்பு புதனன்று ஒரே நாளில் 4.7 பில்லியன் டாலர் உயர்ந்து 49.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதன் மூலம் சீனாவின் அலிபாபா குழும தலைவரான ஜேக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக் , 2014ல் வாட்ஸ் ஆப்பை கைப்பற்றியதற்கு பின் தனது உலகளாவிய சந்தையை விரிவுப்படுத்த 5.7 பில்லியனை முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஒரே குடையின் கீழ் டிஜிட்டல் செயலி மற்றும் வயர்லெஸ் சேவை இரு நிறுவனங்களும் இணைந்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை வைத்துள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2020ம் ஆண்டில் 14 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது. இது ஆசியாவில் தனிநபர் ஒருவரின் மிகப்பெரிய வீழ்ச்சியாகும். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்காக 100 மில்லியன் முககவசத்தை உலக சுகாதார நிறுவனத்துக்கு தானமாக அளித்த அலிபாபா குழுமம் செவ்வாய் வரை 1 பில்லியன் டாலரை இழந்திருந்தது.