மன்வந்த்ரம்
மன்வந்த்ரம்


மன்வந்த்ரம் என்றால் கால அளவு. கல்பம். அதாவது ப்ரம்மா ஸிருஷ்டிக்கும் காலம். ப்ரம்மாவின் சிருஷ்டி காலத்தில் அதாவது ப்ரம்மாவின் பகல் காலத்தில் 14 மன்வந்த்ரங்கள். அதில் 7 ஆவது மனு வைவஸ்வத மனு. இவர் தனக்கு ஸத் புத்திரன் வேண்டும் என தபஸ் செய்தார். குலகுருவான வஸிஷ்டரின் ஆலோசனைப்படி யக்ஜம் செய்தார்.
மனு புத்திரன் வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் மனைவியோ புத்ரி வேண்டும் என நினைத்தாள். புத்ரி பிறந்தாள். அந்த பெண்ணின் பெயர் இளா. மனுவும் தனக்கு மகன் தான் வேண்டும் என வஸிஷ்டரிடம் சொல்ல அவரும் சிவனை த்யானித்து தன் தபோ சக்தியால் அந்த பெண்ணை ஆணாக மாற்றினார். ஆணின் பெயர் ஸுத்யும்னன். இளா ஸுத்யும்னனாக மாறினாள்