மனிதன்
மனிதன்


ஒரு காட்டில் ஒரு பறவை தானியம்
சாப்பிட்டுக் கொண்டு இருந்தது.
அவ்வழியே சிங்கம் சென்றது. நரி சென்றது .நாய் சென்றது.
எதற்குமே கவலைப்படவில்லை பறவை.
அது தன் தானியத்தை தின்று கொண்டு இருந்தது.
ஆனால் அவ்வழியே ஒரு மனிதன் வந்தான்.
உடனே பறவை பறக்க தொடங்கியது தானியம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு .
உடனே அந்த மனிதன் கேட்டான் மிருகங்களை எல்லாம் கண்டு அஞ்சாத நீ ஏன் என்னைக் கண்டு மட்டும் அஞ்சி ஓடி ஒளிகிறாய் என்று.
மனிதன் கேட்டான்.
அதற்கு அந்த பறவை சொன்னது. சிங்கம்புலி மற்ற மிருகங்களை அடித்து சாப்பிடக் கூடியது தான்.
அது நமக்கு தெரிந்த சுபாவம்.
நரி வஞ்சனை உடையது. அது மற்றவர்களை ஏமாற்றும்.
அதுவும் தெரிந்த சுபாவம் தான்.
நாய் மற்றவர்களைக் கடிக்கும். அதுவும் நமக்கு தெரிந்த சுபாவம் தான். ஆனால் இந்த மனிதன் இருக்கிறானே.
அவன் எப்போது என்ன செய்வான் ,என்று அவனைப் பற்றி யாராலும் ஒன்றுமே கூறமுடியாது. கணிக்க இயலாது.
எனவே தான் உன்னை கண்டு அஞ்சி பறக்கிறேன் என்றது.