மனிதன்
மனிதன்


ஒரு கடற்கரை சாலையில் ஒரு இளம் மனிதன் மிக அமைதியாக காற்று வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆனந்தமாக இருந்தான்.
அவ்வழியே வந்த ஒரு முதியவர் கேட்டார் ஏன் அப்பா நீ இளம் வயதுதானே? இந்த வயதில் ஓடியாடி நன்றாக சம்பாதிக்கலாம். இவ்வாறு பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கிறாயே என்று ஒரு ஆர்வத்தில் கேட்டார்.
அதற்கு அந்த இளம் வாலிபன் ஓ நீங்கள் சம்பாதித்து என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டான்?
அதற்கு அவர் நான் சம்பாதித்தால் அந்தக் காசில் ஒரு வலை வாங்குவேன்.
அந்த வலையை கடலில் வீசி மீன்களை பிடிப்பேன். அந்த மீன்களை விற்று நல்ல லாபம் சம்பாதித்து பிறகு மறுபடியும் ஒரு படகு வாங்குவேன்.
அந்தப் படகில் சென்று அதிகமான மீன்களைப் பிடித்து அதை விற்று விடுவேன்.
பிறகு மனைவி குடும்பம் என்று மிகவும் சந்தோஷமாக ஆனந்தமாக வாழ்க்கையை கழிப்பேன் என்று கூறினார்.
அதற்கு அந்த இளம் மனிதன் சொன்னார்,
நான் இப்போது அதிகமான பணம் இல்லாமல் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.
அதிகமாக பணம் சம்பாதித்து உடலை வருத்தி பிறகு மறுபடியும் சந்தோஷம் தானே அனுபவிக்க வேண்டும்.
அந்த சந்தோசத்தை இப்போதே நான் அனுபவிக்கிறேன் என்று
கூறினான்.
பெரியவருக்கு ஒன்றும் பேச முடியவில்லை.