anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

மாந்தி தோஷத்துக்கு

மாந்தி தோஷத்துக்கு

2 mins
197


*மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம்*

மாந்தியின் காரகத்துவம் என்றால் மற்றவரை துன்படுத்தி சந்தோஷப்படுபவன். கேரள ஜோதிடத்தில் முழுக்கமுழுக்க மாந்திக்கு முக்கிய பங்கு கொடுப்பார்கள். அவர்கள் மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன்களைச் சொல்வார்கள். 


தமிழ் நாட்டு ஜோதிடர்கள் ஒரு சிலர் மட்டும் மாந்தியை வைத்து பலன் கூறுகின்றனர். அறிவியல் ரீதியாக பார்க்கும்பொழுது மாந்தி குளிகன் என்பது சனியின் துணைக்கோள் ஆகும்.

சனிபகவானின் புத்திரன் மாந்தி என்றும் மாந்தியின் சகோதரர் குளிகன் என்றும் அழைப்பார்கள். சனியை ஆயுள் மற்றும் கர்மகாரகன் என்றும் அவரின் புத்திரனான மாந்தியை மரண காரகன் என்று கூறுவார்கள். 

மாந்தி என்பவன் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான பாதிப்பைக் கொடுக்கும் கொடூர வில்லன் என்று கூறலாம். ஏழு கிரகங்களுக்கு அப்பாற்பட்டு ராகு கேது போன்று மாந்தியும் ஒரு நிழல் கிரகம் ஆகும். 

ஜோதிடர்கள் மாந்தி மற்றும் குளிகன் ஸ்புடம் கணித்து அந்தெந்த ராசி கட்டத்தில் அமரவைப்பார்கள். ஜாதத்தில் இதற்கென்று ஒரு கணக்கு முறை உள்ளது. 


ஒரு குழந்தை பகலில் பிறந்தால் குளிகன் என்றும் இரவில் பிறந்தால் மாந்தி என்றும் சொல்லப்படுகிறது.

எங்கெல்லாம் மாந்தி இருக்கிறதோ அந்த பாவகாரகத்துவதை கெடுத்து அழித்துவிடும் மாந்தி முக்கிய முக்கிய பாவமான 1, 5, 9 திரிகோணத்தில் இருந்தால் பிறப்பே ஏன் எடுத்தோம் என்று தோன்றும். 

மூன்று கர்ம பாவங்களைக் கொடுக்கவல்லது. மாந்தி 1, 2, 5, 7, 8, 9 பாவத்திலிருந்தால் கடும் தோஷத்தை ஏற்படுத்தும் இதில் சிம்மத்தில் இருந்தால் இந்த தோஷம் குறைக்கப்படும் என்று கூறுகின்றனர் ஏனென்றால் மாந்தி என்பவர் சூரியனின் பேரன் ஆவர். ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு உபயஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சிறப்பான வீடு ஆகும். 


மாந்தியால் ஏற்படும் மனை தோஷம், புத்திர தோஷம், பிரேத சாபம், திருமணத் தடை, குடும்ப தோஷம் தீர சனிக்கிழமை அல்லது அவரவர் நட்சத்திர நாட்களில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், சனி பகவான் தன் குடும்பத்துடன் காட்சி தரும் திருநறையூர், மற்றும் உங்கள் அருகில் இருக்கும் மாந்தி இருக்கும் கோவிலுக்குச் சென்று உங்களால் முடிந்த பரிகாரங்களைச் செய்து தோஷ நிவர்த்தி செய்யவும்.இந்தியாவிலேயே மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம் திருநறையூர்தான். ஜாதக ரீதியாக மாந்தியல் ஏற்படும் திருமணத்தடை புத்திர தோஷம் போன்றவைக்கு பரிகாரம் கிடையாது. 


மாந்தி என்பது சனியின் புதல்வன் ஆவார் அதனால் சனிக்கு செய்தாலே போதும். மாந்திக்கு என்று தனியாக வழிபாடு கிடையாது. திருநறையூர் சனிபகவானை வழிபடும்போது அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி மட்டும் இல்லாமல், ஜாதக ரீதியாக அனைத்துவித சனி தோஷங்களும் திருமணத்தடை புத்திர தோஷம் நீங்கும். சனி பகவானுக்குரிய மன நிம்மதி குறைகள், பயம் குழப்பமும் தீரும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 10 கி.மீ தொலைவில் திருநறையூர் நாச்சியார் திருக்கோயில் அமைந்திருக்கிறது. 


சனி பகவான் எழுந்தருளுகிறார். இவருக்கு சனிச் சன்னிதியும் தனிக் கொடிமரமும் அமைந்திருக்கிறது. அவருக்கு இடமும் வலமும் மந்தா தேவி, சேஷ்டா தேவி என்ற இரு மனைவிகளும் கீழ் வரிசையில் மாந்தி, குளிகன் என்ற குழந்தைகளும் திருக்காட்சி தருகிறார்கள். சனீஸ்வரனுக்கு பின்புறத்தில் சூரிய பகவான் இருக்கிறார்.


நவக்கிரங்களுடனும் சூரியன் தன் இரு மனைவிகளான உஷா, பிரதிக்ஷாவுடன் காட்சி தருவதும் வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational