கூலித் தொழிலாளி பெண்
கூலித் தொழிலாளி பெண்


ANDHRA கிழக்கு கோதாவரி மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது .
ஒரு ஏழை கூலித் தொழிலாளி பெண் ஒருத்தி வெயிலிலே மக்களுக்காக பாடு பட்டு வரும் போலீஸ்காரர் களுக்காக இரண்டு பெரிய BOTTLE களில் COOL DRINKS வாங்கிக் கொடுத்து எங்களுக்காக பாடுபடும் நீங்கள் இதை சாப்பிடுங்கள் என்று கொடுத்தாள்.
மிகவும் நெகிழ போலீஸ்காரர் தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், இவ்வளவு பாசமாக பரிவுடன் எங்களுக்கு வாங்கி கொடுத்து விட்டீர்களே என்று கூறி மேலும் இரண்டு பெரிய பாட்டில்களை அந்த அம்மாவிடம் கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் கொண்டுபோய் கொடுங்கள் என்றார்.
இதை காணொளி மூலம் கண்ணுற்ற டிஜிபி அவர்கள் அந்த அம்மாவை அழைத்து வரச்சொல்லி அந்த அம்மாவுக்கு நன்றி கூறி சல்யூட் அடித்தார் .இதனால் அந்த அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு இதனை காணொளி மூலம் பார்த்த ANDHRA CM ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அந்த அம்மாவைக் கூப்பிட்டு பாராட்டி பரிசுகள் வழங்கினார்.