கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


காக்கிச் சட்டைக்குள் கனிந்த இதயம்! -வறுமையில் வாடிய குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்த காவலர்கள்பி.ஆண்டனிராஜ்
மனைவி மற்றும் நோயாளிகளான மூன்று பெண் குழந்தைகளுடன் ஸ்டீபன் வாடியதைக் கண்டு இரக்கப்பட்ட காவலர்கள், அந்தக் குடும்பத்துக்குப் புதிய வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். பொதுமக்களின் உதவியால் அந்தப் பணி நடந்தது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் எத்தனையோ சோதனைகள் ஏற்பட்ட போதிலும், மனிதம் துளிர்க்கும் நற்செயல்களும் நடக்கவே செய்கின்றன. பிறருக்கு உதவும் குணத்தைக் கொரோனா கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தார்கள்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சியால் வறுமையில் வாடிய ஒரு குடும்பத்துக்கு 25 லட்சம் மதிப்பிலான சொந்த வீடு கிடைத்திருக்கிறது. இந்தச் சம்பவம் காவல்துறையினர் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.