anuradha nazeer

Inspirational

4.6  

anuradha nazeer

Inspirational

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

1 min
11.3K


ஒரு வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை புதிய உருவாக்கிய பாகிஸ்தான் டாக்டர் அமெரிக்காவில் பாராட்டு

அமெரிக்காவில் ஒரு வெணன்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய சாதனத்தை உருவாக்கிய டாக்டருக்கு அப்பகுதி மக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்தனர்.

வாஷிங்டன்


கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரஸ் உடலில் நுழைந்த பின் மெல்ல, மெல்ல சுவாசத்தை நிறுத்தும் அளவிற்கு கொடூரமாக இருப்பதால், செயற்கை சுவாசம் வழங்கும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.உரிய நேரத்தில் வென்டிலேட்டர் பொருத்தப்படாவிட்டால், நோயாளியை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் 

உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர்.


இதனை உணர்ந்த அமெரிக்க வாழ் பாகிஸ்தான் டாக்டரான சவுத் அன்வர், ஒரு வென்டிலேட்டர் மூலம் ஒரே சமயத்தில் 7 நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கினார்.அவரது இந்த கண்டுபிடிப்பின் மூலம் 

அவர் அமெரிக்க மக்கள் மத்தியில் ஹீரோவாக உருவாகியிருக்கிறார். 


அவரது மருத்துவப் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சவுத் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டின் அருகே அப்பகுதி மக்கள் வரிசையாக கார்களில் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தி ஆச்சரியப்படுத்தினர். 

கார்களுக்குள் இருந்தபடி வாழ்த்து பேனர்களை தாங்கியும், கைகளை அசைத்தும் சென்றனர். இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அன்வர், பதிலுக்கு கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார். தன் மீது மரியாதையும் அன்பும் 

வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர், பேஸ்புக்கில் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார்.மான்செஸ்டர் மெமோரியல் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வரும் அன்வர், கனெக்டிகட் மாநில 

செனட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational