கோவிட் இடைவெளி
கோவிட் இடைவெளி
கண்களில் நீர்மல்க,
ரேவதி வேலைக்காரி கண்களில் நீர்மல்க, அம்மா என் ஒரே பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லை. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் 100 ரூபாய் கொடுங்கள் அம்மா.பிறகு என் சம்பளத்தில் நீங்கள் அதை கட் செய்து கொள்ளலாம் என்றாள். அதற்கு ஏன்அம்மா? என்னிடம் ஏன் ? அம்மா பணம்? மாசக் கடைசியில் வந்து என்னிடம் கேட்கிறாயே போய் என்று சலித்துக்கொண்டாள்.
சற்று நேரத்தில் ஜானகியின் பேரன் வந்து பாட்டி எனக்கு இப்போ உடனே நூறு ரூபாய் தா
நான் கிரிக்கெட் பந்து வாங்கணும் என்று மிரட்டினான்
என் செல்ல குட்டி ,என்று தன் முந்தானையில் கட்டி வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை அவிழ்த்து அதிலிருந்து ஒற்றை ரூபாய் நோட்டை மட்டும் கொடுத்து இது போதுமா இன்னும் வேண்டுமா ?இன்னும் வேண்டுமென்றால் தாராளமாக கேள்
. நான் தருகிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார் .பையன் அதை வாங்கிக் கொண்டு ஓடினான்.
பேரன் அதை வாங்கிக்கொண்டு விரு விரு என்று ஓடினான் .தெருவோரம் சென்று கொண்டிருந்த ரேவதி வேலைக்காரியிடம் இந்தாங்கம்மா 100 ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் .உங்கள் மகனை டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள் என்றான். என்ன பரந்த மனது, சிறு பையனாக இருந்தாலும் அவனது விரிந்த விசாலமான இருக்கிறது. ஜானகியம்மா இத்தனை அனுபவம் தன் பேரன் என்றும் வேலைக்காரியின் மகன் என்றும் என்ன ஒரு
கனிவற்ற அணுகுமுறை. வேலைக்காரியாய் இருந்தால் என்ன ?அவளுக்கும் மனது ஒன்றல்லவா.
யாராக இருந்தாலும் மனம் ஒன்றுதானே .அதில் வேதனைகள் ,துடிப்புகள் ,உணர்ச்சிகள் என்பது ,ஆண்,பெண் ஏழை ,பணக்காரன், இளைஞன் ,முதியவன் என்று அனைவருக்கும் சமம் தானே .இதை ஏன் உலகம் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறது.