கெங்கையம்மன்
கெங்கையம்மன்
கெங்கையம்மன்
ஜமதக்னி முனிவருடைய மனைவியான ரேணுகா தேவியை தான் கெங்கையம்மன் என்று வழிபடுகின்றனர்.
புராண காலத்தில் ஜமத்கினி என்ற ஒரு முனிவர் இருந்தார்.
இந்த முனிவரின் மனைவியின் பெயர் ரேணுகா தேவி இவர்களுடைய மகன்தான் பரசுராமர். இந்த ஜமத்கனி முனிவர் , தன்னுடைய மனைவியான ரேணுகா தேவிக்கு ஒரு வரத்தை கொடுத்திருந்தார் .அது என்னவென்றால் ரேணுகா தேவியின் கற்பின் காரணமாக இவர் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, ஆற்றின் ஓரத்தில் இருக்கும் மணலைக் கொண்டு மண் பானையை உருவாக்க முடியும் . அதில் தண்ணீர் எடுத்து வரலாம் என்ற ஒரு வரத்தினை கொடுத்திருந்தார். அதன்படி ஒருமுறை ரேணுகாதேவி தாமரை குளத்திற்கு தண்ணீர் எடுப்பதற்காக சென்றாள் . அப்போது வான் வழியாக ஒரு கந்தர்வன் சென்றான், அந்த கந்தர்வநின் நிழலானது தண்ணீரில் தெரிந்தது.
இவ்வளவு அழகான இளைஞனா! என்று மனதில் நினைத்தால் ரேணுகா தேவி. உடனே இவள் உருவாக்கிய மண் பானையானது உடைந்து போனது. மீண்டும் இவளால் மண் பானையை உருவாக்க முடியவில்லை. இதனை அறிந்த ஜமத்கனி முனிவர் நீ கற்பிழந்தாய் ,நீ உயிரோடு இருக்கக் கூடாது என்று ரேணுகா தேவியின் தலையை வெட்டுமாறு தன மகனான பரசுராமரிடம் கூறினார். தந்தை சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்ட பரசுராமன் ஏன் ?எதற்கு? என்று கேள்வி கேட்காமல் தன் தாயின் தலையை வெட்ட முடிவெடுத்தார். தன் மகனே ,தான் தலையை வெட்ட வருவதை கண்ட ரேணுகாதேவி மகனால் வெட்டப்பட்டு இறப்பதை விட தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வது மேல் என முடிவு செய்து, ஓட தொடங்கினாள் .ஓடிச்சென்று ஒரு சலவைத் தொழிலாளியின் வீட்டில் மறைந்து கொண்டாள். அங்கு பரசுராமர் உள்ளே வந்தார். உள்ளே வந்து தன் தாயின் தலையை வெட்ட முற் பட்டபோது அந்த சலவைத் தொழிலாளியின் மனைவி அதைத் தடுத்தார். உடனே சலவைத் தொழிலாளி மனைவியின் தலையை முதலில் வெட்டினார்.. அதன் பிறகு தன் தாயின் தலையை வெட்டினான்.
பிறகு நேராக தன் தந்தையிடம் சென்று உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என்றார். அதைக் கேட்ட ஜமத்கனி முனிவர் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றார். தாயின் உயிரைத் திருப்பித் தருமாறு கேட்டார் , அப்போது ஜமதக்னி முனிவர் ஒரு பாத்திரத்தில் புனித நீரை கொடுத்து இந்த தண்ணீரை கொண்டு வெட்டப்பட்டு கிடக்கும் உடலுடன் தலையை சேர்த்து வைத்து தண்ணீரை தெளி இறந்து போனவர்கள் உயிர்ப்பித்துக் கொள்வார்கள் என்றார். இதையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பரசுராமன் வேகமாக சென்று உயிர்ப்பிக்கும் போது அவசரத்தில் அந்தத் தொழிலாளியின் மனைவி உடலையும் ரேணுகாதேவியின் தலையை வைத்து ஒன்றாக இணைத்து தண்ணீரை தெளித்தார்.அதேபோல அந்த தொழிலாளியின் மனைவி தலையையும் ரேணுகாதேவியின் உடலையும் வைத்து தண்ணீரை தெளித்தார் இருவருமே உயிர் பெற்றனர். இந்த நிகழ்வை கொண்டுதான் இந்த குடியாத்தம் ஊரில் ஒரு கோவில் எழுப்பி ரேணுகா தேவியை கெங்கையம்மனாக வழிபடுகின்றனர். இந்த புராணத்தை விளக்கும் விதமாக தான் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திரு விழாவானது சிறப்பாக நடைபெறுகிறது.
