anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார்

2 mins
240


1823 ஆம் ஆண்டு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில், ராமைய்யா பிள்ளைக்கும், சின்னம்மைக்கும் மகனாக அவதரித்தவர் “இராமலிங்க அடிகளார்”. இவர் சிறு குழந்தையாய் இருந்த போதே இவர் ஒரு தெய்வ பிறவி என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இவர் ஐந்து வயது குழந்தையாக இருந்த போது இவரது பெற்றோர் சிதம்பர கோவிலல் நடராஜரின் தரிசனத்தை காணும் போது, அந்த நடராஜ பெருமானுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்டு மகிழ்ச்சியில் சிரித்தார் இராமலிங்க அடிகளார். அப்போது அக்கோவிலின் அர்ச்சகர்கள் குழந்தை ராமலிங்கத்தை கண்டு அவர் ஓரு தெய்வ குழந்தை என அவரது பெற்றோரிடம் கூறினர்.


சில காலத்தில் ராமலிங்க அடிகளாரின் தந்தை இறந்து விட, சென்னையில் குடியேறி தனது அண்ணனின் வளர்ப்பில் வாழலானார் ராமலிங்கம். இப்போது மிகவும் தீவிர ஆன்மிக தேடலில் ஈடுபட்டிருந்த இராமலிங்க அடிகளார் அந்த முருகப் பெருமானின் அருளால் ஞானமடைந்தார். மக்களின் பசிப்பிணியே சமுதாயத்தில் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்றறிந்து பசித்த மக்களுக்கு அன்ன தானம் இடும் “சத்திய ஞான சபையை” வடலூரில் நிறுவினார். இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என அன்புடன் அழைக்கப்பட்டார்.


இந்த வள்ளல் பெருமான் தன் வாழ்வில் சில சித்து அற்புதங்களை புரிந்துள்ளார். ஒரு சமயம் வள்ளலாரை புகைப்படம் எடுக்க விரும்பிய சிலர் எத்தனை முறை புகைப்படம் எடுத்தும் அவரின் உருவம் அதில் பதிவாகவில்லை. இதற்கு காரணம் வள்ளலார் பெற்ற “ஒளி தேகத்தை” அந்த புகைப்பட கருவியல் பதிவு செய்ய முடியவில்லை. பின்பு தனது அடியவர்களின் ஆசைக்காக சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்தார் வள்ளலார், அதன் பிறகு புகை படம் எடுத்துக்கொள்ளுமாறு கூறியபோது அவரது உருவம் அதில் பதிவாகியது.ஒரு முறை வடலூரிலுள்ள சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம் ஸ்தாபிக்க, அதற்கான மரத்தை வாங்க வள்ளலார் தனது சீடர்கள் சிலரை சென்னைக்கு அனுப்பிவைத்தார்.


சென்னைக்கு ரயிலில் வந்து இறங்கிய அந்த சீடர்கள் வள்ளலார் அவர்களிடம் முன்பே கூறிய அந்த குறிப்பிட்ட மரக்கடைக்கு சென்றனர். அப்போது அச்சீடர்கள் காணும் வகையில் “சூட்சம” வடிவில் தோன்றிய வள்ளலார் ஒரு மரத்துண்டின் மீது நின்று, கொடிமரத்துக்கான மரம் அதுதான் என அடையாளம் காட்டினார். இந்த அதிசயத்தை கண்ட அந்த சீடர்கள் வடலூர் திரும்பிய பின்பு இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கூறினர். அப்போது அங்கிருந்தவர்கள் வள்ளலார் அந்த சீடர்களுக்கு சென்னையில் காட்சியளித்த அதே நேரத்தில், இங்கு வடலூரில் தங்களுக்கு ஆன்மீக போதனைகளை வழங்கி கொண்டிருந்ததாக கூறினர். இதை கேள்விப்பட்ட அனைவரும் வள்ளலாரின் யோக ஆற்றலை எண்ணி வியந்தனர். 



Rate this content
Log in

Similar tamil story from Inspirational