anuradha nazeer

Inspirational

4.6  

anuradha nazeer

Inspirational

இமேஜ்னா என்ன?

இமேஜ்னா என்ன?

2 mins
11.9K


இமேஜ்னா என்ன? நான் ஏன் என்னைப் பற்றி மறைக்கணும்?' - மனம் திறக்கும் அஜித்!

̀̀`` `நீ ஒரு நடிகன்... இப்படி இருக்கக் கூடாது. உன்னோட உணர்வுகளை இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது’னு நிறைய பேர் சொல்றாங்க. ஏன் அப்படின்னு எனக்குப் புரியல. இமேஜ்னா என்ன?"


பெண்கள், முதல் காதல், கதாநாயகன் என்ற பிம்பம், வெற்றிக்கான விருப்பம் என தன் எண்ணவோட்டங்களையெல்லாம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அஜித். 1999-ல் அவள் விகடனுக்கு அளித்த நேர்காணலில்தான் இத்தனை விஷயங்களும். அந்தப் பேட்டி அப்படியே


.

`இப்போதே கொட்டலாமா? இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமா?’ என்று கருமேகங்கள் யோசித்துக்கொண்டிருந்த மாலை நேரம்... சென்னை ராஜாஜி ஹாலைச் சுற்றிலும் டீன் ஏஜ் பெண்கள் கூட்டம்... `ஹேய், அஜீத் இருக்காண்டீ...’ என்கிற பேச்சுக் குரல்களைக் கடந்து உள்ளே நுழைந்தபோது, ஷாட் முடிந்து ஓய்வில் இருந்தார் அஜீத்.


கழுத்தில் தடிமனான வெள்ளிச் சங்கிலி, கையில் முரட்டு பிரேஸ்லெட், ஒற்றைக் காதில் வளையம், ஒரு வாரத் தாடி சகிதம் பாப் சிங்கர் மாதிரி இருந்தார். கேட்டால், ``சும்மா ஒரு ரௌடி கெட்டப்தான்” என்று சிரிக்கிறார். இப்படி ஒரு சிரிப்பை வைத்துக்கொண்டு ரௌடி என்றால் யாரும் நம்பமாட்டார்கள்!


``நான் ரொம்ப சென்ஸிடிவ்” - முகத்தை சீரியஸாக வைத்துக்கொள்கிறார்.


``சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னை ரொம்பவும் பாதிக்கும். சட்டுனு சந்தோஷமாவேன்... சட்டுனு கோபப்படுவேன். நான் காட்டாறு மாதிரி... என் அன்பு, கோபம் எதுவானாலும் அளவுக்கு அதிகமாத்தான் வெளிப்படும். என் மேல நிஜமான அன்பு வெச்சிருக்கிறவங்களால மட்டும்தான் என் வெளிப்பாடுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னை ஏத்துக்க முடியும். மத்தவங்க காட்டாத்து வெள்ளத்துல காணாமல்போற புல்பூண்டுகளா என்னை விட்டு மறைஞ்சுடுவாங்க.


`நீ ஒரு நடிகன்... இப்படி இருக்கக் கூடாது. உன்னோட உணர்வுகளை இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது’னு நிறைய பேர் சொல்றாங்க. ஏன் அப்படின்னு எனக்குப் புரியல. இமேஜ்னா என்ன? நான் ஏன் என்னைப் பற்றி யார்ட்டயும் சொல்லாமல் மறைக்கணும்? போன மூணு வருஷத்து இன்டர்வியூக்களைப் புரட்டினீங்கன்னா அதுல ஹீரா இல்லாத இன்டர்வியூவே கிடையாது யெஸ்... நானும் ஹீராவும் லவ் பண்ணினோம்னு எல்லார்கிட்டயும் சொன்னேன். லவ்தானே பண்ணினேன். லவ்ங்கிறது உயர்ந்த விஷயம்தானே! அதுக்கப்புறமா எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்கள் சரிப்பட்டு வரல. ஸோ பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிட்டோம்...” - சில விநாடிகள் நிதானிக்கிறார்.


``அதுக்காக இனிமே, எனக்குக் காதலே கிடையாதுனு தண்ணியடிச்சுட்டுத் தத்துவம் பேசற ஆள் நானில்லை. எந்தவொரு ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் அதுல நெருடல் வந்துடக்கூடாது. பரஸ்பரம் மரியாதை இருக்கணுமே தவிர, பயம் வந்துடக்கூடாது. என்கூட நடிக்கிற பொண்ணு, லேட்டஸ்ட் பெஸ்ட் செல்லர் நாவல், இந்த உலகம், அதைத் தாண்டின விஷயங்கள்... இப்படி எதைப் பத்தி வேணாலும் பேசற சுதந்திரம் இருக்கணும். முக்கியமா நேர்மை இருக்கணும். அதுதான் லவ்.


தன்னம்பிக்கையுள்ள, தன் மீது மரியாதை கொண்ட பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க ரொம்பவும் நேசிக்கிற ஒருத்தர்கிட்ட உண்மை மட்டும் சொல்லிப் பாருங்க... அந்த அன்பு அற்புதமானதா இருக்கும். `டேய்... நீ ரொம்ப நல்லவன்டா’னு உங்க மேலயே ஒரு மரியாதை ஏற்படும். அன்புக்குப் பொய் சொல்லத் தெரியாது!


அந்த எதிர்பார்ப்பில்லாத அன்பை அள்ளி வழங்கறவங்க பெண்கள்தான். வீட்டுல நுழைஞ்சா `அம்மா’னுதான் கூப்பிடத் தோணுது. `ஒரு வீட்டைக் கட்டறவன் ஆண். அதை இல்லமா உருவாக்கறது பெண்’ என்ற பழமொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெண் இல்லாத வீடு சவக்கிடங்கு மாதிரி. பெண் நம் ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் எவ்வளவு பரிபூரணமானதாகவும் உயிரோட்டம் நிறைந்ததாகவும் மாத்திடறானு நிறைய நேரங்களில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.”


`பெரிய பைக் பிரியரா இருக்கீங்களே... இதுவரை உங்க பில்லியன்ல எத்தனை பெண்கள் உட்கார்ந்திருப்பாங்க..?’


(ஏதோ உள்ளர்த்தத்துடன் சிரிக்கிறார்) ``இப்படிக் கேட்டீங்கன்னா, என்ன பதில் சொல்றது..? நோ கமெண்ட்ஸ்!”



Rate this content
Log in

Similar tamil story from Inspirational