என் தோழி
என் தோழி
என் தோழியின் கணவர் இறந்து ஒரு வருடம் ஆயிற்று.
அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
பாவம் மிகவும் சிரமப்பட்டார்.
ஒரு அலுவலகத்தில் ஆயாவாக பணிபுரிகிறாள்.
சொற்ப வருமானம் .அதில் மூன்று ஜீவன்கள் காலம் தள்ள வேண்டும் என்றால் யாருக்குத்தான் எளிது?
அவள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெரியவர் அவளுக்கு சதா பூ அனுப்பிக் கொண்டே இருப்பார்.
ஆனால் அவள் அதை பொருட்படுத்தவில்லை.
பிறகு காதலர் தினத்தன்று அவள் கேட்டுவிட்டார் .
அம்மா சரோஜா உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.
எனக்கு மனைவி இல்லை.
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
உனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது .
உனது குழந்தைகளும் எனது குழந்தைகளும் நாம் குழந்தைகளாக இனி ஒரே வீட்டில் இருக்கலாமே என்றார் .
புன்னகைத்து என் தோழி. புன். முறுவலுடன். ஏற்றுக் கொண்டாள்.