anuradha nazeer

Inspirational

4.5  

anuradha nazeer

Inspirational

ஏழைகளின் பசி

ஏழைகளின் பசி

1 min
199


ஒரு செல்வந்தர், பழநி முருகப்பெருமான் கோயிலுக்குத் தன் பண்ணையில் விளைந்த முதல் வாழைத்தாரைத் தன் பணியாளர் மூலமாகக் கொடுத்தனுப்பினார். அதிலிருந்தவை, நல்ல கனிந்த வாழைப்பழங்கள். வாழைத்தாரை எடுத்துச் சென்ற ஏழைப் பணியாளருக்கு நல்ல பசி. `அதிலிருந்து இரண்டு பழங்களை எடுத்து உண்டால் யாருக்குத் தெரியப்போகிறது?’ என்று நினைத்து, இரண்டு பழங்களை எடுத்து உண்டும்விட்டார்.


எஞ்சிய பழங்களோ டிருந்த வாழைத்தாரை இறைவன் சன்னிதானத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். வாழைத்தாரைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகி, `நீங்கள் அனுப்பிய வாழைத்தாரில் இரண்டு பழங்கள் இல்லை’ என்று அந்தச் செல்வந்தருக்குச் சொல்லி யனுப்பினார். செல்வந்தர், ``இறைவனுக்கு அர்ப்பணித்த வாழைப்பழங்களை நீ எப்படி உண்ணலாம்?’’ என்று அந்தப் பணியாளரை நையப் புடைத்துவிட்டார்.


அன்றிரவு செல்வந்தரின் கனவில் இறைவன் தோன்றினான். ``நீ அனுப்பிய வாழைத்தாரிலிருந்து இரண்டு பழங்கள் மட்டுமே என்னிடம் வந்து சேர்ந்தன. அவை எவை தெரியுமா... எந்த ஏழையால் சாப்பிடப்பட்டனவோ, அவை’’ என்று சொன்னான்.

இதுதான் வழிபாட்டுநெறி. ஏழைகளின் பசி தீர்ப்பதுதான் இறைநெறி.. 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational