STORYMIRROR

anuradha nazeer

Inspirational

3  

anuradha nazeer

Inspirational

சிவபெருமான் கருணையுடன்

சிவபெருமான் கருணையுடன்

1 min
209


 நம்முடைய ஜாதகம், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகளைக் (பிராரப்த கர்மம்) குறிப்பிடுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும். நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும். இத்தகைய டைம் டிராவலிங் டெர்மினேட்டர் ஸ்டைல் தொழில்நுட்பத்திற்கான அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை நாம் முறையாக வழிபட்டால், இத்தகைய தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான இந்த வேலையை கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வான். அன்பர்களே, உங்கள் ஜாதகம் எவ்வளவு சிரமமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உங்களுக்குக் காட்டினாலும் நீங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். நாள்தோறும் சிவபெருமானை  முறையாக வழிபட்டால் , அந்த வாழ்க்கை அனுபவத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு தேடி வந்தடையும் என்பதில் ஐயமில்லை.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational