சேவை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சேவை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வோர் அணியிலும் பெண்கள் இருக்க வேண்டும்!’ - ஐ.நா விருது வென்ற இந்திய ராணுவ மேஜர் சுமன் ஹவானி
தெற்கு சூடான்அரசின் ராணுவத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் சமாதான செயற்பாட்டாளர்கள் தினத்தை முன்னிட்டு, விருதுகள் வழங்குவது வழக்கம். இவ்வாண்டு `UN Military Gender Advocate of the year’ என்ற விருது இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றும் சுமன் ஹவானி ( suman Gawani ) மற்றும் மெக்சிகோ ராணுவ கமாண்டர் கார்லா மாண்ட்ரியா டே கேஸ்ட்ரா ஆரீயோ (Carla Monterio de Castro Aariyo ) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை.
காணொலி மூலம் நடைபெற்ற விருது விழாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் ஆன்டோனியோ கட்டர்ஸ் (Antonio Gutters) விருதுகளை வழங்கினார். நிகழ்வில், அமைதியை நிலைநாட்டுவதில் பெண்களின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார். ``ஹவானியும் ஆரீயோஸும் தங்கள் சிறந்த செயற்பாட்டால், ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் பிற பெண்களுக்கும் பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளனர்" என்று பாராட்டினார்.
தெற்கு சூடானில் பணியாற்றியபோது 200-க்கும் மேற்பட்ட ராணுவ பார்வையாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மேலும், ராணுவத்தின் ஒவ்வோர் அணியிலும் பெண்கள் கண்காணிப்பாளர்கள் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தினார்.
தெற்கு சூடான் அரசின் ராணுவத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். விழாவின்போது ஐ.நா-வின் தலைவர் பாதுகாப்புப் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பணியின்போது உயிர் நீத்த 83 ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு Dag Hammarskjold பதக்கம் வழங்கப்பட்டது. அதில் உயிரிழந்த இந்திய வீரர்களும் அடங்குவர். அமைதியைப் பேணுவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இந்திய வீரர்களின் வீரம், தியாகம், சேவை ஆகியன போற்றுதலுக்கு உரியது. மற்ற நாடுகளைவிட இந்தியா நிறைய வீரர்களை இழந்துள்ளது" என்று கட்டர் கூறினார்.
ஐ.நா-வுக்கான செயல்பாடுகளின் மூலம் கடந்த 70 ஆண்டுகளில், 160-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. ஐ.நா பாதுகாப்பு செயற்பாட்டாளர்களுக்கு வைரஸ் மட்டுமே பிரச்னை அல்ல, பல வகைகளில் அவர்கள் தாக்கப்பட்டு உயிர் இழக்கின்றனர்.
இதற்கு கடந்த ஆண்டு மட்டும் 39 நாடுகளைச் சேர்ந்த 83 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் உயிரிழந்துள்ளனர்" என்றும் அவர் கூறினார்.
ஐ.நா-வுக்கான பாதுகாப்பு செயற்பாட்டாளர்களை வழங்குவதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து 5,400 வீரர்கள், சைப்ரஸ், காங்கோ குடியரசு, லெபனான், சூடான், சஹாரா, சோமாலியா ஆகிய இடங்களில் சேவை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.