அவர் அல்லவோ ஆசிரியர்
அவர் அல்லவோ ஆசிரியர்


ஒரு மாணவன் நீண்ட காலத்திற்குப் பிறகு தன் ஆசிரியரை சந்திக்கிறான்.
அப்போது அவன் ஆசிரியரே என்னை ஞாபகம் இருக்கிறதா ?
அவரோ இல்லை தம்பி என்கிறார்.
உடனே அவன் நீண்ட வருடங்களுக்கு முன்பு நான் சிறு பையனாக இருந்தபோது, என் வகுப்பில் என் நண்பன் கழட்டி வைத்த கடிகாரத்தை நான் என் பையில் போட்டுக் கொண்டு விட்டேன்.
அவனும் அழுதான்.
நீங்கள் என்ன செய்தீர்கள் தெரியுமா? எல்லாம் மாணவர் களையும்
வரிசையில் நிப்பாட்டி அவர்கள் கண்களை கட்டிக் கொள்ளச் சொன்னீர்கள்.
பிறகு நீங்கள் ஒவ்வொருவரின் பையிலும்
கையைவிட்டு துழாவி
பிறகு அந்த தொலைத்த நண்பனிடம் கொடுத்து விட்டீர்கள்.
எவ்வளவு நாசுக்காக நீங்கள் அதை
கையாண்டு விட்டீர்கள்.
இப்போது சொல்லுங்கள்.
என் முகம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வருகிறதா இல்லையா? என்று
கேட்டான்.
அப்போதே
நான் முடிவெடுத்துவிட்டேன் நல்ல ஒரு பண்பட்ட ஆசிரியராய் தான் எதிர்காலத்தில் வரவேண்டும் . ஒரு ஆசிரியர் தான் எந்த ஒரு விஷயத்தையும்ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க முடியும் என்று .இப்போதாவது
சொல்லுங்கள் என்னை ஞாபகத்திற்கு வருகிறதா ?
ஆசிரியர்
அவர் கூறினார்.
அந்த நாம் கடிகாரத்தைஎடுக்கும் போது
என் கண்களையும் தானே சேர்த்துக் கட்டிக் கொண்டேன்.
அதனால் எந்த மாணவன் பையில் இருந்து எடுத்தேன் என்று எனக்கே தெரியாது? என்றார். ஆசிரியரின் மேல் உள்ள மதிப்பு பன்மடங்கு பெருகி
அ ன்று அவர் நினைத்திருந்தால் திருடியவனை காட்டிக் கொடுத்து இருக்கலாம் .
அவனுக்கு திருடன் என்ற பட்டத்தையும் கொடுத்து இருக்கலாம். ஆனால் அவ்வாறெல்லாம் செய்யாமல் மிகவும் நாசூக்காக எளிமையாக விஷயத்தை கையாண்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார் . அவர் ஆசிரியர்.
அவர் அல்லவோ ஆசிரியர்!!!