anuradha nazeer

Inspirational

5.0  

anuradha nazeer

Inspirational

ஆட்டோ

ஆட்டோ

2 mins
605

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும்போது நெஞ்சுவலியால் துடித்த டிரைவர், ஆட்டோவை ஓரமாக நிறுத்தி, மாணவிகளின் உயிரைக் காத்து, தன்னுயிர் நீத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர், ராமலிங்கம். 54 வயதான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிவருகிறார். தினமும் காலை, மாலை பள்ளி மாணவிகளை ஏற்றிச்செல்லும் பணியைச் செய்துவந்திருக்கிறார். மற்ற நேரங்களில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தும் சவாரிகளை ஏற்றிச்செல்வார். இந்நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் பள்ளியிலிருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு, வி.இ. ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது,

திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு வேறு ஆட்டோவை அழைத்துள்ளார். ஆனால், வேறு யாரும் உதவிக்கு வராததால், மீண்டும் அவரே ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். கீழரத வீதி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது, மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே, ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு சீட்டிலேயே சரிந்துள்ளார். மாணவிகள், அவரை எழுப்ப முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவர் எழவில்லை.

அருகில் இருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழாததால், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், ராமலிங்கத்தைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்கள். ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட நெஞ்சுவலியால் தன் உயிர் பிரியும் சூழலிலும், பள்ளி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய டிரைவர் ராமலிங்கத்தின் செயலை நினைத்து அப்பகுதி மக்கள் நெகிழ்ந்தனர்.

உயிரிழந்த ராமலிங்கம்

இதுகுறித்து ராமலிங்கத்தின் ஆட்டோவில் பயணிக்கும் பள்ளி மாணவிகள் கூறுகையில்,``வீட்டுல இருந்து ஸ்கூலுக்குப் போகும் போதும் சரி, ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போகும்போதும் சரி... வேகம் காட்டாம பொறுமையாத்தான் ஆட்டோ ஓட்டுவாங்க. எங்களோட ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்குகளைப் பத்திரமா எடுத்து வைப்பாங்க.`காலையில சாப்டீங்களா? ஹோம்வொர்க் முடிச்சிட்டீங்களா? ஸ்கூல்ல இன்னைக்கு என்னல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க? எப்போ எக்ஸாம்?'னு ரொம்ப அக்கறையா கேட்பாங்க. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது, வழக்கத்தைவிடவும் ரொம்ப மெதுவாகவே ஆட்டோ ஓட்டிட்டு வந்தாங்க.

முதல் தடவை நெஞ்சுவலி வந்ததும், அந்தப் பக்கம் போன ஆட்டோக்களை ஒருபக்கம் நெஞ்சைப் பிடிச்சபடியே, கையைக் காட்டி நிறுத்திப் பார்த்தாங்க. அந்த வழியில வந்த எல்லா ஆட்டோவுலயும் ஸ்டூடன்ட்ஸ் இருந்ததுனால யாரும் நிறுத்தல. வேறவழியில்லாம, அந்த அங்கிளே ஆட்டோ ஓட்டினாங்க. சிவன் கோயில் பக்கம் வந்தபோது திரும்பவும் நெஞ்சு வலிச்சிருக்கு. ஆட்டோவை ஓரமா நிறுத்திட்டு அப்படியே சாய்ஞ்சுட்டாங்க.

ஆட்டோவில் பயணித்த மாணவிகள்

ஆட்டோவில் பயணித்த மாணவிகள்

அங்கிள், அங்கிள்னு சொல்லி தட்டி எழுப்பியும் எழல. கொஞ்ச நேரத்துல அங்கிள் இறந்துட்டதா சொன்னதும் எல்லாருமே அழுதுட்டோம்” என்றனர்.

ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள பிற ஆட்டோக்காரர்கள், ``ராமலிங்கம் அண்ணாச்சி குறைவான வேகத்துலதான் ஆட்டோ ஓட்டுவார். அதிர்ந்துகூடப் பேசமாட்டார். எல்லாத்துலயும் நிதானம் காட்டுவார். இறக்கும்போதுகூட ஆட்டோவை ஓரம்கட்டி யாருக்கும் பாதிப்பில்லாம இறந்திருக்கார்” என்றனர் வேதனையுடன்.

: இதுகுறித்து ராமலிங்கத்தின் ஆட்டோவில் பயணிக்கும் பள்ளி மாணவிகள் கூறுகையில்,``வீட்டுல இருந்து ஸ்கூலுக்குப் போகும் போதும் சரி, ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போகும்போதும் சரி... வேகம் காட்டாம பொறுமையாத்தான் ஆட்டோ ஓட்டுவாங்க. எங்களோட ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்குகளைப் பத்திரமா எடுத்து வைப்பாங்க.`காலையில சாப்டீங்களா? ஹோம்வொர்க் முடிச்சிட்டீங்களா? ஸ்கூல்ல இன்னைக்கு என்னல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க? எப்போ எக்ஸாம்?'னு ரொம்ப அக்கறையா கேட்பாங்க. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது, வழக்கத்தைவிடவும் ரொம்ப மெதுவாகவே ஆட்டோ ஓட்டிட்டு வந்தாங்க.

முதல் தடவை நெஞ்சுவலி வந்ததும், அந்தப் பக்கம் போன ஆட்டோக்களை ஒருபக்கம் நெஞ்சைப் பிடிச்சபடியே, கையைக் காட்டி நிறுத்திப் பார்த்தாங்க. அந்த வழியில வந்த எல்லா ஆட்டோவுலயும் ஸ்டூடன்ட்ஸ் இருந்ததுனால யாரும் நிறுத்தல. வேறவழியில்லாம, அந்த அங்கிளே ஆட்டோ ஓட்டினாங்க. சிவன் கோயில் பக்கம் வந்தபோது திரும்பவும் நெஞ்சு வலிச்சிருக்கு. ஆட்டோவை ஓரமா நிறுத்திட்டு அப்படியே சாய்ஞ்சுட்டாங்க.

அங்கிள், அங்கிள்னு சொல்லி தட்டி எழுப்பியும் எழல. கொஞ்ச நேரத்துல அங்கிள் இறந்துட்டதா சொன்னதும் எல்லாருமே அழுதுட்டோம்” என்றனர்.

ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள பிற ஆட்டோக்காரர்கள், ``ராமலிங்கம் அண்ணாச்சி குறைவான வேகத்துலதான் ஆட்டோ ஓட்டுவார். அதிர்ந்துகூடப் பேசமாட்டார். எல்லாத்துலயும் நிதானம் காட்டுவார். இறக்கும்போதுகூட ஆட்டோவை ஓரம்கட்டி யாருக்கும் பாதிப்பில்லாம இறந்திருக்கார்” என்றனர் வேதனையுடன்.

Rate this content
Log in

Similar tamil story from Inspirational