73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் இந்து கோயில்
73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் இந்து கோயில்


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்துக்கள் கணிசமாக இருந்த போதிலும், பிரிவினை நடந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் இந்து கோயிலை தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்து மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு அவர்கள் வழிபடுவதற்கு என்று முறையாக இந்து கோயில்களோ, இறுதி சடங்குகளை நடத்த தகன மேடைகளோ இதுவரை இல்லை. தங்களுக்கென ஒரு கோயிலை அமைத்துக்கொள்ள இந்து சமுதாய மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். அந்நா
ட்டின் மனித உரிமைகள் ஆணைய உத்தரவுப் படி 2017-ம் ஆண்டு கோயில் கட்டிக்கொள்ள 2000 சதுர அடி நிலம் இஸ்லாமாபாத்தில் ஒதுக்கப்பட்டது.
ஆனாலும் தள வரைப் படத்துக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளை தாமதப் படுத்தி வந்தனர். இறுதியாக அனைத்திற்கு ஒப்புதல் பெற்று இஸ்லாமாபாத்தின் எச்-9 செக்டார் பகுதியில் இன்று (ஜூன் 24) எளிய முறையில் பூமி பூஜை போடப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மல்ஹி இவ்விழாவுக்கு தலைமை தாங்கினார் கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்று பெயரிட்டுள்ளனர்.