STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Romance

4  

Harini Ganga Ashok

Drama Romance

உதயகீதம்

உதயகீதம்

1 min
277

கண்சிமிட்டும் ரகசியமே

புன்னகை செய்ய மாட்டாயா

இடைவிடாத தேடலே

உயிரூட்ட மாட்டாயா

கதை பேசும் நிலவே

மனதை உரைக்க மாட்டாயா

சுவாசமான வாசமே

ஏக்கங்கள் தீர்க்க மாட்டாயா

வழி தவறி

திரிகிறேன் வானிலே

பௌர்ணமியாய் தரிசனம்

தர மாட்டாயா

தனித்து நிற்கும் இரவிலே

ஐவிரல் பற்றி

விலகாமல் இருப்பாயா

ஓசையற்ற இசையாய்

உடைந்த இசையாய்

இல்லாமல் என் மனதின்

உதயகீதமாய் உடன் வருவாயா

காலமெல்லாம்...


Rate this content
Log in

Similar tamil poem from Drama