உறவுகள் வாழ்க
உறவுகள் வாழ்க


ஆரிரரோ பாடி என்னை
தூங்க வைப்பாள் அன்னை
தோளில் சுமந்து வெளியில் என்னை
தூக்கிச் செல்வார் அப்பா
பாசமுடன் பள்ளிவரை
உடன் வருவார் தாத்தா
பலகாரம் தந்து எந்தன்
பசியைத் தீர்ப்பாள் பாட்டி
புத்தாடை போட்டு பார்த்து
முத்தம் தருவாள் அத்தை
பிரியமுடன் பொம்மை வாங்கி
பரிசளிப்பார் மாமா
கண்படுமே என்று என்னை
காத்து நிற்பாள் மாமி
சிறந்த கதை பலவும் சொல்லி
சிரிக்க வைப்பாள் சித்தி
உறவு ஒன்றாய் சேர்ந்தாலே
இன்பம் வந்து கூடும்
மறவாமல் இதனை நாம்
மனதில் கொள்வோம் நாளும்
ஆரிரோ ஆரிரோ …