STORYMIRROR

Harini Ganga Ashok

Drama

4  

Harini Ganga Ashok

Drama

தந்தையின் உள்ளம்

தந்தையின் உள்ளம்

1 min
253

வசந்த காலத்தை காட்ட 

என் வீட்டில் அவதரித்தாள் 

ஈடுயிணையில்லா வரமாக 

அவளோடு சேர்ந்து தினம் 

நானும் வளர்ந்தேன் 

என் கைபிடித்து நடந்தவளை 

கரம் பிடித்து கொடுக்கிறேன் 

அவள் மனம் கவர்ந்தவனிடம் 

இணையோடு இணைந்துவிட்ட 

மகிழ்ச்சி அவள் வதனத்தில் 

கண்முன்னே வளர்ந்தவள் 

கணவனோடு நிற்கையில் 

ஆனந்தக்கண்ணீர் என்னிடத்தில் 

ஆயிரம் பேர் சூழ்ந்திருந்தும் 

மகளின் சலங்கை ஒலியை 

மட்டும் விரும்பி கேட்கும் 

தந்தை நான்!


Rate this content
Log in

Similar tamil poem from Drama