தனிப்பட்ட மனித உரிமையாம்..... ஓரினச்சேர்க்கை....!
தனிப்பட்ட மனித உரிமையாம்..... ஓரினச்சேர்க்கை....!
இயற்கை ஒருவனே அனைத்திற்கும் பெரியவன்.
சட்டங்களும், விதிமுறைகளும், கலாச்சாரங்களும், இயற்கைக்குட்பட்வை....
ஓரினச்சேர்க்கை என்பது இருமனம் சேர்க்கை என்பது பொருளாகும்.
அறியாமைதான் வெறுப்பதற்குக் காரணம்........
உணர்வுகளும் ,ஆசைகளும் மனித வாழ்வில் இயல்பான பண்பாகும்...
சட்டங்கள் கற்றுத்தரும் பாடம் சமத்துவம், சகோதரத்துவம்.......
பாரம்பரிய திருமணம் என்றாலும், பாரபரியமற்ற திருமணம் என்றாலும் இணைய போவது இருமனம்....,!
ஓரினச்சேர்க்கை என்பது கலாச்சார பழக்கவழக்கங்களுக்கு எதிரானதில்லை...
இயற்கைக்கு புறம்பானதில்லை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை
மனித உடலில் இயற்கையாகவே ஏற்படக்கூடிய மாற்றங்களே காரணம்...
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல ஆனால் குற்றமாக பார்க்கப்பட்டன..... குற்றமாக பார்க்கப்படுகிறது.....
மனிதர்கள் அனைவரும் சக மனிதனின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.....
தனிப்பட்ட மனித உரிமைகள் மற்றும் விருப்பங்கள் ஒருபோதும் சமூகத்திற்கு எதிரான தில்லை...
ஓரினச்சேர்க்கை என்பது தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விருப்பம் அதை பொதுவாக கருதி அவர்களை காயப்படுத்தவோ, இழிவுப்படுத்தவோ கூடாது....
ஓரினச்சேர்க்கையில் இணைந்து வாழ்பவர்களுக்கு....... உன் வாழ்க்கை ,உன் உரிமை, வீண் பேச்சை கேட்காதீர்கள், உறுதியாய் இருங்கள், உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு.
வாழ்க்கை ஒரு முறைதான் அதை பிடித்தப்படி வாழுங்கள்.
இக்காலகட்டத்தில் திருமண வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருப்பதில்லை ......இச்சூழலில் பிடித்தவர்கள் பிடித்தவர்களுடன் வாழட்டும்...... வளரட்டும்.
