புது விடியலே!
புது விடியலே!
கண்ணில் கலையின்றி!
கற்பனையில் கனவோடு!
கால்களில் வேகமின்றி!
மனதில் நம்பிக்கையோடு!
வீட்டில் நேரத்தை கழித்து
என்ன செய்யப்போகிறோம்
என்ற அவநம்பிக்கையோடு
தேடிய என் தேடல்
என்னை எறும்பை போல்
சுறுசுறுப்பாக மாற்றியது
என் மனதை மழலை மொழியில்
பேச வைத்தது
புன்னகையில் பொலிவு வீசியது
வாழ்வின் வழியைக் காட்டியது
கனவின் கதவு திறந்தது
கவலையின் தடமே மறைந்தது
உயிரில் உணர்வு தோன்றியது
உணர்வின் எண்ணம் சிலிர்த்தது
எண்ணம் எழுத்தாக உருவெடுத்தது
இந்த உருவத்தை செதுக்கி
சிலையாக மாற்றி வைக்க
இடம் ஒன்று அமைந்தது
உருவமாய் உருவாகிய என்
கவிதைகளை சமர்ப்பிக்க
இந்த உலகிற்கு காண்பிக்க
இணையத்தள வலையகம்
ஒன்று அமைந்தது
இது எனக்கு இறைவன்
காட்டிய வழியா?
இல்லை என் திறமையின் வரமா?
இன்று அதே தலத்தில் நான்
இதைக் கூறும் போது என்
மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது!
என் கவிதைகளை சமர்ப்பிக்க!
உணர்வுகளை உயிர்ப்பிக்க!
கனவுகளைக் கண்டெடுக்க!
சிந்தனையை சிந்திக்க வைக்க!
என்னை யார் என்று தேட வைக்க!
என் திறமையை வளர வைக்க!
அமைந்த அமைப்பே!
என் ஆற்றலைத் தூண்டிய அமுதமே!
உன்னை என்னால் மறக்க முடியாது
இன்று நான் இங்கு நிற்க
காரணமாக நீ!
நாளை நான் என் வாழ்வில்
உயர்ந்து நின்றால் அதற்கு
காரணமும் நீயே!
பள்ளத்தில் இருந்த என்னை
கைகொடுத்து தூக்கி விட்டது
நீயல்லவா?
என் பெற்றோர்கள் என்னை
பார்த்து தட்டிக் கொடுக்க!
என் குடும்பம் என்னை
தாங்கிப் பிடிக்க!
காலம் அனைத்தையும் மாற்றும்
என் வாழ்க்கை மாறியது
புது வாழ்வின் வழி பிறந்துவிட்டது
உயிரில்லை சுவாசமின்றி!
இறைவனுக்கு என் பணிவான நன்றி.
