STORYMIRROR

neechalkaran neechalkaran

Abstract Inspirational

4  

neechalkaran neechalkaran

Abstract Inspirational

புத்தகம்

புத்தகம்

1 min
411

வாசகரை எடைபோடும்

நூல்களின் அட்டைப்பக்கம்

குறைத்து மதிப்பிடும்

குறியீடுகளைக் கொண்டிருக்கும்


புத்தகம் 

படிக்குமளவிற்கு ரசனையும்

வாசிக்குமளவிற்குப் பொறுமையும்

பாடப்புத்தகம் கற்றுத் தருவதில்லை


புத்தகத்தின்

ஒட்டிய பக்கங்களைப் 

பிரிக்கவைப்பது 

அதன் ஒட்டாத 

பக்கங்களின் பொறுப்பு


புத்தகங்களைக் கரைத்துக் 

குடிப்பதால் உண்டாகும் 

பக்கவிளைவு 

இன்னொரு

புத்தகமாகலாம்


பள்ளிச் சிறுமியிடம் 

பசிச் சுமையில்லை

பூவிற்கும் சிறுமியிடம்

புத்தகச் சுமையில்லை


साहित्याला गुण द्या
लॉग इन

More tamil poem from neechalkaran neechalkaran

Similar tamil poem from Abstract