STORYMIRROR

Ayyappan

Inspirational

4  

Ayyappan

Inspirational

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை

1 min
28

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் எங்கள் பழைய(தமிழ்) கல்விக் கொள்கை போதும் 

மும்மொழி கல்விக் கொள்கை வேண்டாம் எங்கள் முதல்மொழி கல்விக் கொள்கை போதும்,


தாய்மொழி கல்விகற்று இந்த முழு அண்டமும் சுற்றி வருகிறோம்

வைப்பாட்டி மொழிகள் கற்று நாங்கள் என்ன வாரி அள்ளப் போகிறோம்


வேண்டும் என்றால் மூன்று மொழி அல்ல முன்னூறு மொழியும் கற்போம்

வேண்டாம் எனும் போது ஏன் வீணாய் முரண்டு வாதம்


அடிப்படைத் தேவைகளை அன்பாகத் தர தகுதி இல்லாதவர்களே

ஆதிக்கமாக இந்த கல்விக் கொள்கையை புகுத்த நினைப்பது ஏன் 


படித்தோர்கள் நிறைந்த மாநிலம் என பகுத்தறிவர்கள் கலந்த மாநிலம் என

பார்த்து பார்த்து பதைபதைக்கிறதோ

பறித்து விட திணிக்கறீர் இந்த புதிய கல்விக் கொள்கையை 


உயிர் கொள்ளி வைரஸ் எங்கள் உயிரை பறித்துக் கொண்டிருக்கையில் எங்கள்

உடனிருந்து இந்த வைரஸ்கள் எங்கள் உரிமைகளை பறிக்க நினைக்கிறது 


பார்த்து முடிவெடுங்கள் இங்கு படித்தோர்கள் ஏராளம் பகுத்தறிவர்கள் ஏராளம் எங்களை சரியான பாதை நோக்கி அழைத்துச் செல்லும் #எழுச்சி_தமிழர்-கள் தாராளம்.


#TNRejectsNEP2020


எதுவும் நிரந்திரம் இல்லை

  


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational