பரிசு
பரிசு
உன் பெயரும் என் பெயரும்
இணைகின்ற போது நாம்
ஒரு புதுப் பெயரை உருவாக்கலாம்
அந்தப் புதுப் பெயரை இவ்வுலகிற்கு
பரிசளிக்கலாம். பரிசளிக்கும்
தருணத்திற்காக என் மனம் விழைகின்றது
நீயும் எனக்கு ஒரு பரிசு
நானும் உனக்கு ஒரு பரிசு
நாமும் இணைந்து தரப் போகிறோம் ஒரு பரிசு
இவ்வுலகிற்கு
நம் பெயரை என்றும் நிரந்தரமாய்
சொல்வதற்கு.