ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தை
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தை


இறந்தகால சித்திரமாகவும்
நிகழ்கால படைப்புகளாகவும்
எதிர்கால நினைவுகளாக
திகழ இருப்பன
நமது புகைப்படங்களே...
மனதின் செயல்களை
நம் முக பாவனை மூலம்
வெளிக் கொணர்வோமானால்
அத்தகு நிகழ்வை
எதிர்கால நினைவுகளாக
மனதில் கொணர கோப்புகளாக
சேகரிப்பவை
புகைப்படமாக தானே...
இயற்கையின் நிகழ்வுகளோ
மனதில் ரசிக்க வைப்பவை
நிகழ்வுகளை நினைவுகளாய்
எதிர்காலத்தில் அமையுமேயானால்
புகைப்படங்கள் தான...
மனதின் எண்ணங்களை
வார்த்தைகளால் கூட
வெளிப்படுத்த முடியாத பலவற்றை
புகைப்படங்களே வெளிக்கொணர்கின்றன
என்றால் அவை மிகை தான...
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை
மட்டுமன்று
எண்ணற்ற நிகழ்விற்கு
நிகர் என்றாலும் உண்மை...