STORYMIRROR

Ramesh k

Inspirational

3  

Ramesh k

Inspirational

நட்பின் மடல்

நட்பின் மடல்

1 min
302


பங்கேற்கவியலா திருமணத்திற்கோர் நடட்பின் மடல்


விடுமுறை பெற்று 

விழாமுடித்து, விடைபெற வரவில்லை. 

விழி நிறைத்து வாழ்த்து சொல்லி 

வழியனுப்ப வரவில்லை. 

விலா எலும்பாய் விளங்கி நின்று 

விழு முன்னே தோள் கொடுக்கும் தோழர்களாய் 

சரித்திரப் பக்கங்களில் உயிர்மெய் 

எழுத்துக்களால் உயிர்த்து வரும் 

சாதனைதனை வெற்றிச் சிகரம் எடுத்துப் 

புறப்படும் நண்ப

ர்களுக்கு 

எங்கள் சந்தோஷத்தில் 

சரிபாதிக்கு மேலும், 

அனுபவத்தில் அடைந்ததனைத்தும், 

அச்சுப் பிறழாமல் கொடுத்து, 

அன்பும், அறமும் ஊற்றாய் ஊடே வைத்து, 

பண்பும், பயனும் குறையாமல் விளைய, 

இல்வாழ்வில் இன்பங்கள் எல்லாம் 

இடையறாது செழிக்க 

இதயத்திலிருந்து வாழ்த்துகின்றோம்..


‘இனிய திருமண வாழ்த்துக்கள்!!


Rate this content
Log in