மனம்
மனம்


கண்ணில் சிறை வைத்தேன்
காட்சிகளாய் வெளி வந்தாய் !!
மண்ணில் சிறை வைத்தேன்
பல்லுயிராய் வெளி வந்தாய் !!
விண்ணில் சிறை வைத்தேன்
விண்முகிலாய் வெளி வந்தாய் !!
பொன்னில் சிறை வைத்தேன் - நல்
அணிகலனாய் வெளி வந்தாய் !!
புத்தகத்தில் சிறை வைத்தேன் - புது
சிந்தனையாய் வெளி வந்தாய் !!
உள்ளத்தில் சிறை வைத்தேன் - நல்
உணர்வுகளாய் வெளி வந்தாய் !!
உறக்கத்தில் சிறை வைத்தேன்
கனவுகளாய் வெளி வந்தாய் !!
கனவுகளில் சிறை வைத்தேன்
கற்பனையாய் வெளி வந்தாய் !!
கற்பனையில் சிறை வைத்தேன்
கவிதைகளாய் வெளி வந்தாய் !!
மேகத்தில் சிறை வைத்தேன்
மழைத்துளியாய் வெளி வந்தாய் !!
கருவறையில் சிறை வைத்தேன்
மழலையாய் வெளி வந்தாய் !!
கல்லறையில் சிறை வைத்தேன்
கண்ணீராய் வெளி வந்தாய் !!
கல்லுக்குள் சிறை வைத்தேன்
கலையழகாய் வெளி வந்தாய் !!
கடலுக்குள் சிறை வைத்தேன் - நல்
முத்தாய் வெளி வந்தாய் !!
சொல்லுக்குள் சிறை வைத்தேன்
சந்தங்களாய் வெளி வந்தாய் !!
சந்தங்களில் சிறை வைத்தேன்
சங்கீதமாய் வெளி வந்தாய் - உனை
சிறை வைக்க எண்ணாமல் காரணமாய் விட்டு விட்டேன் !
பேராற்றல் பரிமளிக்க கண்டமெல்லாம் கடந்து சென்று - இந்த
அண்டம் முழுதும் ஆட்கொண்ட ஆண்டவனின் - திரு
நிழலில் அமைதி கொண்டாய் !!