STORYMIRROR

Hemalatha P

Inspirational

3  

Hemalatha P

Inspirational

மழலை

மழலை

1 min
282

மலர்ந்த சிரிப்பழகே!

மை வைத்த கண் அழகே!

பிஞ்சுப் பூவழகே!

மற்றவர்களை மகிழ்விக்கும்

பேரழகு!

உன் பிஞ்சுப் கால்கள்

எட்டி உதைக்க!

என் நெஞ்சம் மகிழ்ந்து

அதை ஏற்று சிரிக்க!

உன் மழலை மொழி

மழையாய் பொழிய!

என் இன்பக் கண்ணீர்

இந்த மழையோடு சேர!

உன் குரும்புச் செயல்கள் 

என்னை சிரிக்க வைக்க!

உன் அழகில் நான்

மயங்கி போக!

எனக்கு கிடைத்த வரமே!

வரமாய் வந்த என் உயிரே!

உன்னோடு நான் இருப்பேன்

தாய் என்ற உறவோடு

உன்னுடன் நிலைத்திருப்பேன்.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational