மாயம்
மாயம்
திருமண வரவேற்பு நிகழ்வு
வசந்த மண்டபம் முழுக்க
அழகழகான பெண்கள் கூட்டம்
விண்ணிலிருந்து இறங்கிய தேவதைகளாய்
கலர் கலராய் மின்விளக்கு ஒளியில்
அதோடு இசை நிகழ்ச்சியின்
துள்ளல் இசைப்பாடல்கள்
கிறங்க வைக்கின்றனமனதை
அங்குமிங்கும் நடமாடும்
பெண்களின் மேனிலிருந்து
வீசும் சுகந்த நறுமணம்
விருந்தின்போது
எதிர்வரிசையில் பார்தேன்
நீ உண்ணும் கைவிரல்கள் அழகு எனக்கும் ஒரு கவளம்
ஊட்டாதாயென்று ஏங்கினேன்
எழுந்து கைகழுவப் போனாய்
அப்போது
எங்கும் தேடிப் பார்க்கிறேன்
உன்னை காணவில்லை
எங்கே மாயமாய் மறைந்தாய்?