STORYMIRROR

Se Bharath Raj

Drama Classics Fantasy

3  

Se Bharath Raj

Drama Classics Fantasy

கனவே கலையாதே

கனவே கலையாதே

1 min
183

உறக்கத்தில் வரும்

கனவுகள் சில

நாம்‌ உறங்கிதான் அதை காண்கிறோம்

என்ற நினைவு

இல்லாமல் போக,

விழிகள் விழிக்கும் போது

அது கனவே இல்லை

என்று 

நம்மிடமே நாம் மன்றாடுகிறோம்...

அப்படி நானும்

சில தினங்களில்

என்னிடம் மன்றாடி இருக்கிறேன்,

என்னுடன் பிறந்த 

என் சாயல் கொண்ட தம்பிக்காக.,

என்னை மூழ்கி சென்ற

கடல் அலைகளுக்காக.,

நான் கட்டிய

மஞ்சல் கயிற்றை சுமந்த

கருப்பு நிற புடவை அணிந்தவளுக்காக.,

என்னுடன் தான் எப்போதும் இருக்கிறேன்

என்று கூறிய அந்த உடலற்ற உருவத்திற்காக.,


மன்றாடி மன்றாடி

தோற்று போனாலும்

அக்கனவுகளை மீண்டும் ஒரு முறை

நினைவு படுத்துகையில்,

அதலாம் நிஜமாக இருக்குமோ

என்ற கேள்வி மட்டும் 

மீண்டும்

என்னை வந்தடைகிறதே தவிற..

அந்த கனவுகள் வருவதில்லை..

ஒருவேளை அக்கனவுகள் 

மீண்டும் வந்தால் 

அது கனவு என்று 

எனக்கு தெரிந்தால் கூட

உறக்கத்திலும் 

உறக்க கூறுவேன்,

"கனவே கலையாதே" என்று…



Rate this content
Log in

Similar tamil poem from Drama