கலைஞர் காவியம்
கலைஞர் காவியம்
கல்லக்குடி களம்கண்ட காவிய நாயகனே!
கருணாநிதி என்னும் கதிரொளித் தலைவனே!
முத்துவேலரின் முத்தான தவப்புதல்வனே!
முத்தமிழ் போற்றும் மூத்த அறிஞனே!
தமிழன்னை சூடிய தங்க மகுடமே!
தன்மானத் தமிழரின் தன்னிகரில்லா புகழே!
சொல்லில் புரட்சி, எழுத்தில் எழுச்சி,
செயலில் வரலாறு படைத்த செம்மலே!
தென்றல் தவழும் தென்புலம் எங்கும்,
திசைகள் தோறும் உன் புகழ் ஒலிக்கட்டும்!
காலங்கள் கடந்தும் உன் சீர்மிகு தொண்டு,
தமிழர் நெஞ்சங்களில் காவியமாய் நிலைக்கட்டும்!
வாழ்க உன் புகழ்!
வளர்க உன் பெருமை!
தமிழுள்ள காலமெல்லாம்
நிலைக்கட்டும் கலைஞர் காவியம்!
- .வா சபரிசாய்
