கலைஞர் காவியம்
கலைஞர் காவியம்
கல்லக்குடி கொண்ட கருணாநிதியே!
கல்லும் கனிந்திடக் களமிறங்கிய காவியமே!
களத்தில் முழங்கிய தமிழினத்தின் சிங்கமே!
முத்துவேலரின் முத்தான தவப்புதல்வனே!
முத்தமிழ் முடிசூடிய மூத்த அறிஞனே!
பொன்னியின் அலைகளில் புலமை மணம் வீசியவனே!
பொதிகைத் தென்றலில் தமிழின் குரலானவனே!
சங்கத் தமிழின் செழுமையைச் சுமந்தவனே!
தன்மானத் தமிழரின் தலைநிமிர்ந்த பெருமையே!
வெண்கொற்றக் குடையென விரிந்த புகழே!
வேங்கையின் சீற்றமாய் எழுந்த வீரமே!
வாளினும் கூரிய உன் வசனத் தமிழே!
வையகம் வியந்திடும் உன் எழுத்தின் வலிமையே!
காவிரிக் கரையினில் காலங்கள் மாறினாலும்,
கன்னித் தமிழின் பெருமை என்றும் குறையாது!
கடலலை ஓயினும், காற்றின் திசை மாறினும்,
கலைஞர் புகழ் என்னும் தீபம் அணையாது!
பனைமர உயர்வும், பாறையின் உறுதியும்,
பாரதித் தமிழின் பாய்ச்சலும் கொண்டவனே!
வள்ளுவன் வகுத்த அறத்தின் நிழலிலே,
வாழ்வியல் பாதையில் தடம்பதித்த தலைவனே!
தென்பாண்டித் தென்றலும் உன் புகழ் பாடட்டும்!
வடவேங்கடம் வரை உன் வரலாறு முழங்கட்டும்!
தமிழர் நெஞ்சங்கள் கோட்டையாய் நிற்கட்டும்!
தலைமுறைகள் தோறும் உன் சிந்தனை வாழட்டும்!
வாழ்க கலைஞர்! வளர்க அவர் புகழ்!
வாழ்க செந்தமிழ்! வெல்க தமிழர் அறம்!
மண்ணுள்ள காலமும், மொழியுள்ள காலமும்,
மங்காத காவியமாய் நிலைக்கட்டும் —
நம் கலைஞர் கருணாநிதியின் புகழ்!
- .வா.சபரிசாய்
