கசந்த காலங்கள்
கசந்த காலங்கள்
விடியும் காலையில்
சட்டென மேலெழுகிறது
கடந்து போன நாட்கள்
மனம் கவர்ந்தவளிடம்
கொஞ்சி கொஞ்சி
பேசிய நொடிகள்
கானல் நீராகிப்போனது
மலர்களை காணும் நேரமெல்லாம்
அனிச்சையாக நினைவில் வருகிறது
அவளின் அதரங்கள்
அதில் நான் வரைந்த கவிதைகள்
ஆயுளுக்கும் சிலிர்ப்பை தருமல்லவா
வாழ்வின் நிதர்சனம்
புரிந்த பின்னும்
மறக்கவோ மறுக்கவோ
முடியவில்லையே
நடந்து முடிந்தவைகளை.

