இளைஞர்களின் நிலை
இளைஞர்களின் நிலை
இளைஞர்கள் பாகுபாடு இல்லாமல் வளரட்டும்
தாய் தமிழ்நாடு செழிக்கட்டும்
சமூக வலைதளங்கள் ஒழியட்டும்
சமத்துவம் எங்கும் நிலவட்டும்
ஏழ்மை என்னும் வேர் அழியட்டும்
இளைஞர்கள் எங்கும் மலரட்டும்
கோபம் என்னும் நெருப்பு அனையட்டும்
ஒற்றுமை பூமியில் நிலைக்கட்டும்
இளைஞர்களின் நிலை உயரட்டும்
இந்தியாவின் நிலை மாறட்டும்
வேற்றுமை எண்ணம் எதற்காக?
இளைஞர்களை அழிக்கவா?
வளர்ச்சியை தடுக்கவா?
சிறுவயதில் வேலை எதற்காக?
இளைஞர்களின் திறமையை முடக்கவா?
அவர்களின் வாழ்வை அழிக்கவா?
இளம் குற்றவாளிகள் எதற்காக?
உயிர்களை எடுக்கவா?
உறவுகளை கோர்க்கவா?
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கட்டும்
தாழ்மை நிலை ஒழியட்டும்
உண்மை எங்கும் நிலைக்கட்டும்
நேர்மை எதிலும் ஒலிக்கட்டும்
இளைஞர்களின் மனம் மாறட்டும்
அவர்களுள் நம்பிக்கை உதிக்கட்டும்
இந்த புதிய இளைஞர்களால்
பூலோகம் சிறந்து விளங்கட்டும்.
