என் மகளுக்கு வாழ்த்து
என் மகளுக்கு வாழ்த்து


குட்டி சட்டை போட்டுக்கொண்டு
எட்டி பிடிக்கும் கரத்தை விட்டு
வெட்ட வெளியில் தட்டு தடுமாறி
அடி எடுத்து வைக்கும் வட்ட நிலவே ,
இன்னல் நிறைந்த இம்மண்ணில் ,
பெண்ணாய் பிறந்த நீ
விண்ணை முட்டும் நன்னிலை பெற ,
என் கை விடுத்தாலும், என்றும்
நம்பிக்கை விடாமல் இரு .