என் கருவே
என் கருவே
என் புது 🤱🏻உறவே❤
என் கருவே
நீ ஆணா 👶பெண்ணா👧 என அறிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டும் பொழுது...😊
நான் மட்டும் நீ 🤱🏻என்னுள் என்ன செய்துகொண்டு இருப்பாய்🤔
நான் 🗣பேசுவதை கேட்டுக்கொண்டு இருப்பாயா?
நான் உண்ணும் 🥭🍟உணவு உனக்கு பிடிக்கிறதா?
நான்😡 கோவபட்டால்
நீயும் கோவபடுவாயா?🥵
நான் சிரித்தாள்😃
நீயும் 😝சிரிப்பாயா?
நீ எப்பொழுது என்னுள் உதைத்து என்னுடன் பேசுவாய்?🤔
நீ என்னைப்போல் இருப்பாயா?👩
என்னவன்போல் இருப்பாயா?👱
என நித்தம் நித்தம் உன்னையே🤱🏻 நினைத்துகொண்டு
உனக்காக காத்திருக்கிறேன்😘🥰😍
என் கருவே 2
வெளிநாடு சென்ற உன் தந்தைக்காக
காத்திருந்து
உன்னை தொட்டுணர
தவமிருந்து
உனக்கு பெயர் வைக்க வார்த்தைகளை
தேடிக்கொண்டிருந்தேன்
என்னவனும் வந்துவிட
அன்பினை பொழிந்துவிட
யாருக்கு வாய்க்கும் இந்த பெருவாழ்வு
என பூரிப்பில் மகிழ்ந்திருந்தேன்
உன்னை, உன் அசைவை தொட்டுணர்ந்து
கண்களில் ஈரம் கொண்டான் என்னவன்
இப்பொழுதும் காத்து கொண்டு இருக்கிறேன்
இம்முறை உன் வரவிற்காக...
என் கருவே 3
நான் மாம்பழம் சாப்பிட
நீ உள்ளே உதைக்க...
என் பிள்ளைக்கும் பிடிக்குது
என நான் சிரிக்க...
வேண்டாமென உதைக்கிறது
என என்னவன் வம்பிலுக்க...
குழந்தை பிறக்கட்டும் யார் சொல்வது
சரி என்று பார்ப்போம் என
இன்பமாய் கடந்தது ஏழு மாதங்கள்....
என் கருவே 4
மகப்பேறு விடுப்பு எடுத்து
பள்ளியை விட்டு வரும்பொழுது
அடுத்த முறை உன்னை தூக்கி வருவேன்
என மனதில் ஆனந்தம்
யார் கண் பட்டதோ
அனைத்தும் முடிந்தது ஒரு நாளில்
அசைவில்லை உன்னிடம்
வாழும் ஆசையில்லை என்னிடம்
சிறு சிறு விசயமும் உனை நினைவூட்ட
நான் ஏங்கினேன் உனக்கு உணவூட்ட
உப்பிய வயிற்றுடன் நடந்த நான்
ஒட்டிய வயிற்றுடன் இன்று
என்னை மன்னித்து எனக்கு
மீண்டும் ஒரு வாய்ப்பு தருவாயா உனை சுமக்க?
என்கருவே 5
ஆசையாசயையாய் கட்டிய வீட்டில்
தொட்டிலாட வருவாய் என...
ஒலிபெருக்கி இங்கு வேண்டாம்
குழந்தைக்கு இடிக்கும் என்று
சொன்னார் உன் தந்தை...
தொட்டிலில் ஆடும்முன்னே தோட்டத்தில்
புதைந்ததேனோ?!!!
இதற்காகவா ஆசையாய் செடி வளர்த்தேன்?
உன்னை இந்நிலையில் பார்க்கவா கண் கொடுத்தான் இறைவன்?
உன்னை இப்படி ஏற்றுக்கொள்ள முடியாது!
மீண்டும் என்னிடம் பிறந்து வா
அப்பொழுது தூக்கி கொண்டாடுகிறேன்.