STORYMIRROR

Lakshmi Raghukumar

Abstract

4  

Lakshmi Raghukumar

Abstract

என் சம்மந்தி

என் சம்மந்தி

1 min
45

என் வருங்கால

மருமகள்

எப்படியேனும்

இருந்து விட்டுப் போகட்டும்!


என் சம்மந்தி மட்டும்

என் ஆசைப்படி

எனக்கமைந்திட்டால்

போதும்!


பஜனைக்கு சென்றாலும்

பர்ச்சேஸூக்கு போனாலும்

பக்கத்துத் தெரு

பார்க்கில் வாக்கிங் ஆனாலும்

பாசமாய் எனை(யும்)

அழைத்திட்டால்

போதும்!


உடன் பிறந்த சகோதரியாய்

உடன் படித்த தோழியாய்

உறவாடும் இனிய உறவாய்

உண்மையான அன்பின்

உறுதுணையாய் உவகையுடன்

எனை நேசித்திட்டாலே

போதும்!


சீர் செனத்தி ஏதும் வேண்டாம்

சீராய் என் மகனுடன்

சீரும் சிறப்புமாய் மருமகள்

சிறப்பாய் வாழ்ந்திட்டாலே

போதும்!


மகனும் மருமகளும் எங்கிருந்திடினும்,

மகிழ்வாய் என்னுடன்

மனம் ஒன்றி பழகிடும்

மதித்து நடந்திடும்

நல் சம்மந்தி

போதும்!


இன்றைய எனது

இக்கனவு பலித்திட

இவ்வன்னையின் விருப்பத்திற்கு

இன்று எல்.கே.ஜி. யிலிருக்கும்

இக் குட்டிச் செல்லம்

இசைந்திட

இனிதே வாழ்த்துங்கள்

போதும்!.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract