Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Raghukumar

Others

4  

Lakshmi Raghukumar

Others

கொரோனா

கொரோனா

1 min
13


*இருமினால் தொற்றும் கிருமியாம் - உன்னால்

துப்புவதும் தும்முவதும் துறந்து

துப்புரவு கற்றுத் தேர்ந்தோம்!.


* சும்மா இருப்பதே சுகம் என்றாலும்

சுமூகமாய் உன்னைத் துறத்திட

சமூகமாய் சுதந்திரம் துறந்தோம்!.


* ஸ்வீகியை மறந்து 

சகியின் கைமணம் சுவைத்தோம்!.

* நுண்ணறிவில் தேர்ந்தோரையும்

நுணுக்கமாய் நுகர்ந்திட்ட

நுண்ணுயிரி நீ!.


* உன்னை அலட்சியம் செய்தோரை

அலறவிட்டு ஆட்டி படைக்கின்றாய்!.


* உலகமே என் அடிமை - என

இறுமார்ந்திருந்தோரை - இடியென

உன் ஆளுமையால்

திணறவைத்தாய்!.


* அரசாங்கத்தை உன்னைத் தவிர

மற்றதை மறக்கவைத்தாய்!.


* குடிகாரனை குடிபோதை இழக்கவைத்தாய்!.

குடும்பஸ்தனை மிரள வைத்தாய்!.

குழந்தைகளை ஆர்பரிக்க வைத்தாய்!.

குடும்பத்தலைவிகளை அலறவிட்டாய்!. ஓய்வின்றி ஓட வைத்தாய்!.


* ஆயிரமாயிரமாய் கை வைத்தியமும்

ஆரோக்ய. டிப்ஸ்களும்

ஆரவாரமான மீம்ஸ்களும்

ஆளைக்கொள்ளும் வதந்திகளும்

ஆளாளுக்கு வாரி வழங்கிட வைத்தாய்!.


* உன் உயிர் கொல்லும் உதாசீனத்திற்கு

உண்மையாய் வைத்திடுவோம்,

ஓர் முற்றுப்புள்ளி!.

உலகே தூற்றிடும் உன்னை

தூரவிரட்டிடுவோம், நிரந்தரமாய்!!.



Rate this content
Log in