எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
உன் உதட்டின் புன்னகையில் நனைந்து,
உன் நாஎச்சிலில் குழைந்து,
உன் ஸ்பரிசத்தில் என் உயிரை பார்க்கிரேனடி என் கண்ணம்மா!
உன் அமுது மொழியில் கிறங்கி,
உன் அடுத்து சொல் கேட்டு,
என் கவலைகளை மறந்துவிட தோனுதடி என் கண்ணம்மா!
உன் வருகையால் என்னைத் தேற்றிக் கொண்டு,
உன் புன்னகையில் என் சங்கடங்கள் கறைந்ததடி என் கண்ணம்மா!
என் கோழைத்தனம் கூட உன் கண் பார்த்து ஓடி ஒளிந்து கொள்ள,
சிறு சிறு கள்ளத்தனமோ என்னிடம் எட்டிப்பார்க்கிறது!
நீ என்னுள் வந்த நாள் முதல்,
தெளிந்த என் இதயத்தில், பல எதிர்பா
ர்ப்புகள், பல கனவுகள் உன்னிடம்!
இந்த உலகில் உன்னை அன்றி வேறு எவரிடமும் மண்டியிட மனமில்லையடி என் கண்ணம்மா!
உன் அழகு மடியில், உன் வாசனையின் அரவணைப்பில் உறங்கிட நான் மலைத்துப்போகிறேன்!
நான் காத்திருந்து பெற்ற வரம் நீ, என்னை என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வந்த தேவதை!
இத்தனையாய் உன்னை நான் காதல் செய்ய, ஏனோ நீ உன் தந்தையை மட்டும் பிடிக்கும் என்கிறாய்.
நிச்சயம் என்னை நினைத்துப் பார்ப்பாய் நீ உன் புகுந்த வீடு சென்ற பிறகு!
இப்படிக்கு,
உன் அம்மா!