ஏனோ புரியவில்லை
ஏனோ புரியவில்லை
மென்மையான இதழ் தீண்டலில்
செவ்வானமாய் சிவக்கும் எந்தன் முகம் மறந்து போனதேனோ
யுகந்தோறும் உடன் வருவேனென்ற மனம் தவிக்கவிட்டதேனோ
வலியையும் ரணத்தையும் நினைவுகளாக தந்துவிட்டு
விழி காண மறுப்பதேனோ
நெஞ்சில் தேக்கிய கனவுகளை
களைத்து செல்வதேனோ
இதயத்துடிப்பின் உண்மை நேசம்
நின்று போனதேனோ
முகவரி ஏதும் தராமல்
விடைபெற்று செல்வதேனோ

