ஏமாற்றம்
ஏமாற்றம்
நீ இதுவாகவோ எதுவாகவோ இல்லை... ஆசைப்பட்டது போல்...
ஓரத்தில் ஓட்டியிருந்த ஏக்கங்கள் எல்லாம்.... தப்பித்துவிட்டதாய் ஆசுவாசப்படுகின்றன.......
இவ்வளவு குரோதங்களை என்னமாய் மறைத்திருக்கிறாய்...
நீ வெளிப்படுத்திய சுயத்தில் கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருக்கிறேன்.....
என் உலகத்தில் முழுவதுமாய் உன்னை அப்புறப்படுத்திய பிறகும் கூட......