திருமந்திரம்
திருமந்திரம்
16. கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள் நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே. 16 தேவர் வணங்குவது ஏன்?அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமை யால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப் பாராட்டி நாடமாட்டார்கள்.
