STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
112

8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8   இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்! தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயை விட வெம்மை உடையவன்; (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையை விட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயை விட அருள் செய்பவன். சிவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract