சேமிப்பு
சேமிப்பு
தீப்பெட்டியில் சேமித்த
நாணயம்
பள்ளி வழியில்
தின்பண்டமாக மாறியது...
மண்ஊண்டியலில்
சேமித்த ரூபாய்
திருநாளில் உடைந்தது...
அஞ்சறைப்பெட்டியில்
சேமித்த நாணயரூபாய்
நவதானிய மணத்திற்கு
திறந்தது...
பாதுகாப்பு அறையில்
சேமித்த
உழைப்பின் பாிசு
விசேஷநாளில் திறந்தது
ஒரு பெட்டி...