STORYMIRROR

Santirathevan Kadhali

Inspirational

4  

Santirathevan Kadhali

Inspirational

விழு அழாதே எழு

விழு அழாதே எழு

1 min
363

_விழு அழாதே எழு_


தோல்வி கண்ட இடத்திலே

வெற்றி என்பது இல்லையோ

மனமுடைந்து பிதற்றுவது

வெற்றிக்கான வழியோ

வடிக்கும் கண்ணீரால்

பதிலளிக்க முடிந்திருந்தால்

உலகிலுள்ள உயிர்களுக்கு

ஏதுண்டு தோல்வி

தோல்வியை உனது வாழ்வின்

வெற்றியின் பாதையாய் மாற்றி

மீண்டெழுந்து முயலு

வெற்றி உந்தன் கையில்

வீணான வேதனையும்

பயனற்ற பேச்சுகளும்

வாழ்வின் அடித்தளம் அல்ல

புரிந்துகொள்வாய் நீயும்

நித்தமும் முயன்று

வியர்வை சிந்த உழைத்து

வெற்றியெனும் கனியதனைப்

பெற்றிடுவாய் நீயும்


Rate this content
Log in

Similar tamil story from Inspirational