Nandhini Rajagopal

Inspirational

4.7  

Nandhini Rajagopal

Inspirational

பெண் என்றால்....

பெண் என்றால்....

1 min
237


நான் கல்கி என்னை நானே தினமும் செதுக்கி கொண்டு இருபதால் நான் எனக்கு சூட்டும் பெயர் இது ஆனால் எனக்கு தினமும் ஒரு பெயர். நான் இப்பொழுது நின்று கொண்டிருப்பது வீதியில், என்னை விலை பேசி விற்கும் வேசி நான். இந்த தொழிலுக்கு எப்படி வந்தீர்கள் என்று கதை எழுதியவர் உண்டு ஆனால் அது உண்மை அல்ல , முதல் முறை கெட்டு போனது ஒரு கிழவனிடம் சிறுமி என்று கூட பாராமல் என்னை சின்னாபின்னம் ஆக்கிய கயவன், வலி தலாமல் துடித்தது மனமும் உடம்புமும், வெளியே சொல்லவில்லை நான் ஆனால் சொன்னது என் கரு.

அந்த கிழவனுக்கு ஆயுள் தண்டனை தந்தது சட்டம், எனக்கும் ஆயுள் தான் வாயும் வயிறும் உண்டு எனக்கும் என் பிள்ளைக்கும். கெட்டு போன பெண்ணிற்கு வேலை தருமா இந்த ஊர்? ஊசி இடம் தந்தது அதனால் நூல் நுழைந்ததாம்? இதுவும் விளையாட்டு என்று சொன்னவன் பேச்சை கேட்டதால் வந்த பயனோ ? பெண்டிர்க்கு  பாலின கல்வி பாடம் ஆக்குங்கள் ஏன்னென்றால் பெண்டிர்க்கு மட்டுமே கருவறை உண்டு!

பெண் ஒரு பொக்கிஷம் பாதுக்காக்க பட வேண்டிய பொக்கிஷம். 

உண்மை சொன்ன நான் உத்தமி இல்லை ஆனால் என்னிலும் பெண்மை உண்டு. எனக்கும் மகள் உண்டு.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational