மாசுபட்ட சுற்றுச்சூழல்
மாசுபட்ட சுற்றுச்சூழல்


இவற்றுக்கெல்லாம் மேலாக, நம் மக்களில் பெரும்பாலானோர் மாசுபட்ட சுற்றுச்சூழலில் தான் வாழ்கின்றனர். நாம் குடிக்கும் நீரில் மாசு, சுவாசிக்கும் காற்றில் மாசு, உண்ணும் உணவில் மாசு - என எல்லாவற்றிலும் மாசு.இதன் மூலம் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட எல்லா வகையான நோய்க் கிருமிகளோடு, நாம் வாழப் பழகி விட்டோம். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த நோய்க் கிருமிகளுக்கு, எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படும்.ஆகவே, இந்த வைரஸ் தொற்றுக்களை நம்மால் எளிதில் வெற்றி கொள்ள முடிகிறது. சுத்தமான சுற்றுச்சூழலில் வாழ்ந்து பழகிய, மேலை நாட்டினருக்கு இந்த வைரஸ்கள் மிகவும் புதிது.அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்கும்போது, வளர்ச்சி குன்றிய அரபு நாடுகள் மற்றும் கீழை நாடுகளில், நுாற்றுக்கணக்கிலேயே மக்கள் இறப்பது இதனால் தான். ஆகவே, நாம் இந்த வைரசை எளிதில் வெற்றி கொள்வது நிச்சயம்.மலேரியா பாதித்த பகுதிகளில் கொரோனா வருவதில்லை என்று ஒரு கருத்து உண்டு. தமிழகத்தில், முன்பு மலேரியா தாக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் தான், மிகவும் குறைவாக கொரோனா தாக்கியதை பார்க்கிறோம். இந்தியா மலேரியாவின் பிறப்பிடம் என்பதாலும், நாம் ஜெயிப்போம்.
நாம்தான் தலைமை
இந்த நோய், சீனாவில் தோன்றி, உலகம் முழுதும் பரவினாலும், இதற்கான மருத்துவத்தில், இந்தியா தான் முதன்மையிடத்தில் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் ஆட்சிக்கு வந்தபோது, திப்புசுல்தான் படைகளோடு ஸ்ரீரங்கபட்டிணத்தில் மோதினர். சதுப்புநில காடுகளில், கொசுத் தொல்லையில் மலேரியா நோய் வந்து பலர் மடிந்தனர். அங்கிருந்த சின்கோனா மரக்காடுகளில் இருந்து, மரப்பட்டையில் தயாரித்த ஒரு கஷாயத்தை ஆதிவாசிகள் மூலம் அவர்கள் உட்கொண்டு உயிர் பிழைத்தனர்.மிகவும் கசப்பாக மருந்து இருந்ததால், அதை விஸ்கி, ஜின் மது பானங்களில் கலந்து உண்டனர். பின்னாளில் இந்த மரப்பட்டையில் இருந்து க்வினின் என்ற வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து குளோரோக்வின் என்ற மருந்து பிறந்தது.நம் நாட்டிலிருந்து மலேரியாவை வேரறுப்பதற்கு, இந்த குளோரோக்வின் மருந்துதான் இன்றளவும் காரணமாக அமைந்தது.குளோரோக்வின் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மருந்துதான், ஹைட்ராக்சி குளோரோக்வின். மலேரியா தவிர, மூட்டுவாதம் எஸ்.எல்.இ., போன்ற நோய்களுக்கும் இது அற்புத மருந்து. உலகில், 70 சதவீதம் மருந்து, நம் நாட்டில்தான் உற்பத்தியாகிறது. அமெரிக்கா முதல் உலகின் அனைத்து நாடுகளும், நம்மிடம் கெஞ்சி வாங்கி உபயோகிக்கின்றன.